You are here
Home > அறிவியல் கல்வி > யுரேகா யுரேகா 01: விண்வெளி வீரர்கள் எவ்வாறு விண்வெளியில் நடக்கிறார்கள்?

யுரேகா யுரேகா 01: விண்வெளி வீரர்கள் எவ்வாறு விண்வெளியில் நடக்கிறார்கள்?

விண்வெளியில் புவியீர்ப்பு விசை மிகவும் குறைவு. பூமியின் மையத்திற்கும் விண்வெளியில் இருக்கும் வீரருக்கும் இடைப்பட்ட தொலைவின் வர்க்கத்திற்கு எதிர் விகிதத்தில் புவியீர்ப்பு விசை இருக்கும். பூமியின் ஆரத்தைப்போல 32 மடங்கு தொலைவில் இருக்கும் வீரருக்கு புவியீர்ப்பு விசை ஆயிரத்தில் ஒரு பங்காக இருக்கும். இதனால், விண்வெளி வீரர் விண்கலத்திலிருந்து வெளியேறினால் கீழே விழமாட்டார். மாறாக மிதந்து கொண்டிருப்பார்.

மேலும் அவர் ராக்கெட் தத்துவ அடிப்படையில் அதனோடு கூடவே நகர முடியும். விண்கலத்தை பழுது பார்க்க சுற்றி வரவேண்டுமெனில், கலத்திலுள்ள பிடிமானங்களை பிடித்துக்கொண்டு அவரால் நகர முடியும்.

Leave a Reply

Top