You are here
Home > அறிவியல் வெளியீடுகள் > செங்கை  புத்தகத் திருவிழா பணியாற்றிய தொண்டர்களுக்கு பாராட்டுவிழா…

செங்கை  புத்தகத் திருவிழா பணியாற்றிய தொண்டர்களுக்கு பாராட்டுவிழா…

கடந்த  டிசம்பர் மாதம் நடைபெற்ற மூன்றாவது புத்தகத் திருவிழாவில் தமிழகத்தின் பிரபல பதிப்பகங்கள் கலந்துகொண்டு புத்தகங்களைக் காட்சிப்படுத்தினர். மேலும் புத்தக விற்பனை நடைபெற்ற நாட்களில் மாலை நேரங்களில் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆளுமைகளின் கருத்தரங்கங்களும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்த புத்தகத்திருவிழா செங்கல்பட்டு மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் மூன்றாவது புத்தகத் திருவிழாவில் தன்னார்வலர்களாக பணியாற்றிய தொண்டர்களுக்குப் பாராட்டு விழா ஞாயிறன்று (ஜூலை 28) அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் சார்பில் செங்கல்பட்டில் நடைபெற்றது. செங்கை புத்தகத் திருவிழாவின் தலைவர் க.அறி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புத்தகத் திருவிழாவின் ஆலோசகர்கள் வே. கணபதி, எஸ்.ஜனார்த்தனன், ஆர்.தனஞ்ஜெயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொண்டர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் இரா.பரணிவர்மன் வரவேற்றார். புத்தகத் திருவிழாவில் செயலாளர் முனைவர் என்.மாதவன் வேலையறிக்கையும் பொருளாளர் ஆர்.வரதராஜன் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். ஆலோசகர்கள் முனைவர் ப.கி.கிள்ளிவளவன், மாச.முனுசாமி உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர். நிறைவு செய்து காக்கை சிறகினிலே மாத இதழ் ஆசிரியர் ஆர்.எட்வின் பேசினர். ச.தீனதயாளன் நன்றி கூறினார்.

முன்னதாக மூன்றாவது செங்கை புத்தகத் திருவிழாவில் தன்னார்வலராக பணியாற்றிய தொண்டர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும், நினைவு கேடயங்கள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Top