You are here
Home > இயக்கச் செய்திகள் > பொன்னமராவதியில் அறிவியல் இயக்கம் சார்பில் கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கம்

பொன்னமராவதியில் அறிவியல் இயக்கம் சார்பில் கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கம்

பொன்னமராவதி ஜூலை-27

பொன்னமராவதியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதிய கல்வி கொள்கைக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அலமேலு ஆரம்ப பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பொன்னமராவதி கிளை சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் புதிய கல்வி கொள்கை -2019 ல் உள்ள குறைகள்பற்றி விவாதிக்கப்பட்டது. இதற்கு அறிவியல் இயக்க ஒன்றிய தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கருத்தாளராக கவிஞர்‌ முத்துநிலவன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் புதிய கல்வி கொள்கையில் உள்ள குறைபாடுகள் பற்றி விரிவாக பேசினார். அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் சதாசிவம் புதிய கல்வி கொள்கை பற்றி விரிவாக பேசினார். பொன்னமராவதி ஒன்றிய செயலாளர் மாரிமுத்து அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் சதாசிவம், மாவட்ட செயலாளர் முத்துகுமார், மாவட்ட துணை தலைவர் மணவாளன்‌ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அறிவியல் இயக்கம் உறுப்பினர்கள் முத்துசாமி, தேவகுமாரன், மகாலிங்கம், தேவேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பொன்னமராவதி சிவராமகிருஷ்ணன்

Leave a Reply

Top