You are here
Home > இயக்கச் செய்திகள் > திருப்பூரில் TNSF மாநில மாநாட்டை முன்னிட்டு 100 பள்ளிகளில் விஞ்ஞானி சந்திப்பு நிகழ்ச்சி..

திருப்பூரில் TNSF மாநில மாநாட்டை முன்னிட்டு 100 பள்ளிகளில் விஞ்ஞானி சந்திப்பு நிகழ்ச்சி..

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்டம் சார்பாக அறிவியல் இயக்கம் மாநில மாநாட்டை முன்னிட்டு 100 பள்ளிகளில் மாணவர்கள் விஞ்ஞானி-வல்லுநர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடந்து வருகின்றது.

இன்று (27-7-19) ஆர்.கே.ஆர் கிரீக்ஸ் மெட்ரிக் பள்ளியில் திண்டுக்கலில் இருந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட இ.செயலாளர், ஆசிரியர் மற்றும் வானியலாளர் திரு.சுப்பு உலகநாத பாண்டியன் அவர்கள் கலந்து கொண்டார்.

வித்யாமந்தீர் மெட்ரிக் பள்ளியில் இன்று காலை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினரும் மதுரா கல்லூரியின் பேராசிரியருமான விஞ்ஞானி Dr.S.தினகரன் அவர்கள் கலந்து கொண்டார்.

சாந்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் இன்று மதியம் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினரும் மதுரா கல்லூரியின் பேராசிரியருமான விஞ்ஞானி Dr.S.தினகரன் அவர்கள் கலந்து கொண்டார்.

மாணவர்களுடன் அறிவியல் மனப்பான்மை மற்றும் அறிவியல் பார்வை குறித்து கலந்துரையாடினார்கள். மாணவர்கள் ஏராளமான கேள்விகளை எழுப்பி அதற்கான அறிவியல் பூர்வமான பதில்களை கேட்டறிந்தனர்.

#TNSFTirupurdistrict
#TNSFStatecongress2019
#ScienceForPeople
#TirupurThinks

Leave a Reply

Top