You are here
Home > இயக்கச் செய்திகள் > தாரமங்கலத்தில் வரைவு தேசிய கல்விக் கொள்கை பற்றி பொதுக்கூட்டம்

தாரமங்கலத்தில் வரைவு தேசிய கல்விக் கொள்கை பற்றி பொதுக்கூட்டம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாரமங்கலம், கிளை சார்பாக 24/ 7/ 2019 புதன்கிழமை மாலை 6 மணி அளவில் வரைவு தேசிய கல்விக் கொள்கை 2019 பற்றிய பொதுமக்கள் மற்றும் விழிப்புணர்வு கூட்டம் தாரமங்கலம் அண்ணாசிலை அருகில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாரமங்கலம் கிளை தலைவர் திருமிகு. ராஜேந்திர சோழன் அவர்கள் தலைமை தாங்கி வழி நடத்திச் சென்றார்..

இந்த கூட்டத்திற்கு வரவேற்புரை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாரமங்கலம் கிளை வட்டார செயலாளர் சி. சந்தோஷ் குமார் வரவேற்புரை ஆற்றினார்..

கூட்டத்திற்கு வாழ்த்துரையாக உதவி காவல் ஆய்வாளர் ஓய்வு சேலம் மாவட்ட காவலர் நலச்சங்கம் திருமிகு டீ.கே மாதேஷ் அவர்களும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி லட்சமாய் ஊர் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமிகு பழனிவேலு ஐயா அவர்களும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தாரமங்கலம் வட்டார செயலாளர் திருமிகு ஐ சரவணன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்ட தலைவர் முனைவர் தி. திருநாவுக்கரசு அவர்கள் புதிய கல்விக் கொள்கை உயர் கல்வி மற்றும் மருத்துவ கல்வியை பற்றி சிறப்புரையாற்றினார். அவர் அவர் பேசும்பொழுது உயர்கல்வியில் என்னென்ன மாற்றங்கள் அந்த வரைவில் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கினார்..

பன்னிரண்டாம் வகுப்பு முடித்த ஒரு மாணவன் உயர்கல்வி படிப்பது மிகவும் கடினம் என்றும், உயர்கல்வி படிப்பதற்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்றும் அவ்வாறு செய்யும்பொழுது ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வி படிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என்றும் மிகவும் விளக்கினார்.

வருங்காலத்தில் மாணவர்கள் எவருமே உயர்கல்வி படிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என்று கூறினார்.

அடுத்து, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் பள்ளிக்கல்வி பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் நா.மணி அவர்கள் என்ன சொல்கிறது இந்த புதிய கல்விக் கொள்கை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

எவ்வாறெல்லாம் அரசுப்பள்ளிகள் மூடப்படுகிறது அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைவதற்கான காரணங்கள் பற்றியும் அற்புதமான எடுத்துக் காட்டுகளுடன் விளக்கினார்.

இந்த புதிய தேசிய கல்விக் கொள்கையால் அரசுப் பள்ளிகள் மூடப்படும் சூழ்நிலை ஏற்படும் என்றும் தனியார்மயம் உருவாகி நம் ஊர் முழுவதும் கோலோச்சும் என்பதைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

அடுத்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட இணை செயலாளர் திரு ரமேஷ் அவர்கள் மக்கள் கருத்து கேட்பு படிவங்களை பற்றிய விளக்கம் கொடுத்தார்..

இறுதியாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வட்டார பொருளாளர் திருமிகு அருள் பிரகாஷ் அவர்கள் இந்த வரைவு தேசிய கல்விக்கொள்கை 2019 பொதுமக்கள் விழிப்புணர்வு கூட்டத்திற்கு வந்திருந்த அத்தனை பேருக்கும் நன்றி கூறி விடைபெற்றார்.

செய்தி: லால், சேலம்IMG-20190726-WA0042

Leave a Reply

Top