You are here
Home > அறிவியல் கல்வி > நாமக்கல்லில் வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்

நாமக்கல்லில் வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்

குழந்தைகளிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் பொருட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக 27வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வருகின்ற ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது.

இதற்காக மாவட்ட அளவில் வழிக்காட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை 23.07.2019 அன்று நாமக்கல் தெற்கு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

திருமிகு. ரகோத்தமன் மாவட்ட பொருளாளர் வரவேற்புரை நல்கினார். திருமிகு. சகா கண்ணன், அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் அறிவியல் இயக்கம் மற்றும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு சம்பந்தமாக அறிமுக உரையாற்றினார். கல்வி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் துரைசாமி இவ்வாண்டுக்கான கருப்பொருள் சார்ந்து அறிமுக உரையாற்றினார். திருமிகு மணிராஜா மற்றும் திருமிகு ராமமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை நல்கினர்.

சிறப்பு விருந்தினர்களாக மாநில கருத்தாளர்கள் திருமிகு .ஜெயமுருகன் மற்றும் திருமிகு .திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டு அறிவியல் விழிப்புணர்வு மற்றும் ஆய்வறிக்கை தயார் செய்தல் சம்பந்தமாக சிறப்புரையாற்றினர். மாநில செயலாளர் திருமிகு .மு.தியாகராஜன் அவர்கள் அறிவியல் இயக்கத்தின் சிறப்புகள் குறித்து வழிகாட்டி ஆசிரியர்களுக்கு விளக்கினார். இந்நிகழ்வில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 150க்கும் மேற்பட்ட வழிகாட்டி ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். திருமிகு. பிரகாசம் துணைச் செயலாளர் நன்றி கூறினார்.

Leave a Reply

Top