You are here
Home > இயக்கச் செய்திகள் > தாராபுரத்தில் அறிவியலாளர் சந்திப்பு

தாராபுரத்தில் அறிவியலாளர் சந்திப்பு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்டம் சார்பாக அறிவியல் இயக்கம் மாநில மாநாட்டை முன்னிட்டு 100 பள்ளிகளில் மாணவர்கள்-விஞ்ஞானி/வல்லுநர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்து வருகின்றது. இன்று (24-7-19) காலை தாராபுரம் லயன்ஸ் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட மாநில தலைவர் பேரா.S.மோகனா அவர்கள் மாணவர்களுடன் அறிவியல் மனப்பான்மை மற்றும் அறிவியல் பார்வை குறித்து கலந்துரையாடினார். மாணவர்கள் ஏராளமான கேள்விகளை எழுப்பி அதற்கான அறிவியல் பூர்வமான பதில்களை கேட்டறிந்தனர்.

#TNSFTirupurdistrict
#TNSFStatecongress2019
#ScienceForPeople
#TirupurThinks

Leave a Reply

Top