You are here
Home > மாநில நிகழ்வுகள் > தஞ்சையில் வளர்ச்சி உபகுழு மாநில மாநாடு

தஞ்சையில் வளர்ச்சி உபகுழு மாநில மாநாடு

20/7/2019 அன்று அறிவியல் இயக்க வளர்ச்சி உபகுழு மாநில மாநாடு தஞ்சாவூரில் நடை பெற்றது.

அகில இந்திய அறிவியல் இயக்கங்களின் கூட்டமைபின் பொதுச்செயலாளர் பேரா,பொ.இராஜமாணிக்கம் மாநாட்டினை துவங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இயற்கை வள மேம்பாட்டில் தமிழகம் எதிர்கொள்ளும் சவால்கள்& விளைவுகள் குறித்து கருத்தாளர்கள் திருவாளர்கள் P.K.இராஜன், V.சேதுராமன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

இரண்டாண்டு வளர்ச்சி உப குழுவின் சார்பில் நடைபெற்ற பணியறிக்கையை ஒருங்கிணைப்பாளர் ஸ்டிபன் சமர்ப்பித்தார். அதனை தொடர்ந்து அறிக்கை மீதான கருத்துகளையும்,எதிர்கால பணிகளையும்14 நபர்கள் தெரிவித்தனர்.

மாநிலபொருளர் S.சுப்பிரமணி, மாநில நிர்வாகிகள் பாலா, தியாகு, நாராயணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் மனதுணைநாதன், ஞானம், நவநீத கிருஷ்ணன் முன்னாள் பொருளர் L.பிரபாகரன், பொன்முடி, வீரமுத்து ஆகியோர் வாழ்த்தியும், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தும் கொடுத்தனர். பொதுச்செயலாளர் திரு.அமலராஜன் அவர்கள் நிறைவுரையாற்றினார். தஞ்சை மாவட்ட பொறுப்பாளர்கள் திருவாளர்கள் Dr.சுகுமார், முருகன், நாராயணசாமி ஆகியோர் அடங்கிய மாவட்ட குழு மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளை மிகவும் சிறப்பாக செய்திருந்தனர். இம்மாநாட்டில்  19 மாவட்டங்களிலிருந்து 79 பிரதிநிதிகள், 9 மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஹைட்ரோ கார்பன்,குடிபராமரிப்பு,குடிநீர் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வளர்ச்சி உபகுழு.TNSF.

Leave a Reply

Top