You are here
Home > மாவட்ட நிகழ்வுகள் > பெருமாநல்லூரில் வல்லுநர் சந்திப்பு

பெருமாநல்லூரில் வல்லுநர் சந்திப்பு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்டம் சார்பாக அறிவியல் இயக்கம் மாநில மாநாட்டை முன்னிட்டு 100 பள்ளிகளில் மாணவர்கள் விஞ்ஞானி-வல்லுநர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடந்து வருகின்றது. 20-7-19 காலை முருகு மெட்ரிக் பள்ளி மற்றும் மதியம்

67082635_2382172098515604_3044647817294381056_nபெருமாநல்லூர் அரசு மேல்நிலை பள்ளியிலும் நடைபெற்றது. திண்டுக்கலில் இருந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட து.தலைவர், ஆசிரியர் மற்றும் வானியலாளர் திரு.சுப்பு உலகநாத பாண்டியன் அவர்கள் மாணவர்களுடன் அறிவியல் மனப்பான்மை மற்றும் அறிவியல் பார்வை குறித்து கலந்துரையாடினார். மாணவர்கள் ஏராளமான கேள்விகளை எழுப்பி அதற்கான அறிவியல் பூர்வமான பதில்களை கேட்டறிந்தனர்.

Leave a Reply

Top