You are here
Home > NCSC > 2019 தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: வழிகாட்டி கையேடு

2019 தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: வழிகாட்டி கையேடு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத் துறையின் உதவியுடன் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு என்ற நிகழ்ச்சியை கடந்த 26 ஆண்டுகளாக தமிழகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைத்து வருவது தாங்கள் அறிந்ததே.

அந்த வகையில் இவ்வாண்டும் தூய்மையான பசுமையான மற்றும் வளமான தேசத்திற்கான அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் என்ற மையப்பொருளை கொண்டு

01) சூழல் மண்டலமும் அதன் செயல்பாடுகளும்

02) ஆரோக்கியம், சுகாதாரம் மற்றும் துப்புரவு

03) கழிவிலிருந்து செல்வம்

04) சமூகம் பண்பாடு மற்றும் வாழ்வாதாரம்

05) மரபுசார் தொழில்நுட்பம் ஆகிய உப தலைப்புகளின் கீழ் விருப்பமுள்ள 10 லிருந்து 17 வயதுக்கு உட்பட்ட 2 (பாலர்) குழந்தைகள் ஒரு குழுவாக இணைந்து 18 வயது நிரம்பிய ஒருவர் வழிகாட்டி ஆசிரியராக ( கல்லூரி  மாணவர், படித்த இளைஞர்கள், பெண்கள், பெற்றோர், ஆசிரியர் பயிற்சி படிக்கும் நண்பர்கள்,  பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் தஎன விருப்பமும் ஆர்வமும் உள்ள யார் வேண்டுமானாலும் வழிகாட்டி ஆசிரியராக செயல்படலாம்.. மூன்று மாதங்களுக்குள் தான் வாழுகின்ற பகுதியில் (உள்ளூர்) மேற்கண்ட தலைப்புகளை ஒட்டிய தங்கள் பகுதி சார்ந்த பிரச்சனைகளுக்கு அவர்களாகவே எளிய வகையில் ஆய்வு செய்து அதற்கான தீர்வையும் அவர்களாகவே பரிந்துரைக்கும் வகையில் அமையும்.

ஆய்வு சோதனையாகவும், கணக்கெடுப்பு முறையாகவும் மக்களின் பிரச்சனைகளை மையப்படுத்தி இருக்கலாம்.

இம்மாநாடு மாணவர்களின் ஆர்வத்தை தூண்டி, சிந்தனையை வளர்த்து அதற்கு அறிவியல் கண்ணோட்டத்தோடு உரிய வடிவம் கொடுக்கும் நல்வாய்ப்பை குழந்தைகளுக்குத் தருகிறது.

மிக எளிய வகையில் அதிக செலவு ஏதும் இல்லாமல் ஆய்வுகள் இருக்கும். இதற்கான அனைத்து வகையான உதவிகளையும், பயிற்சியையும் தமிழ்நாடு அறிவியல் இயக்க நண்பர்கள் செய்வார்கள்.

தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் இந்த அறிவுத் தேடலில் பங்கேற்கிறார்கள், இம்மாநாடு குழந்தைகள் சாதி, மதம், இனம், மொழி, கலாச்சாரம், பாலினம் கடந்து, மகிழ்ச்சியான ஒற்றுமையும், ஒருமைப்பாடும் அமையும் விதமாக இருக்கும்

ஆகையால் நமது குழந்தைகள் இச் செயல்பாட்டின் மூலம் அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி தாங்கள் கற்றுக் கொண்ட தெரிந்து கொண்டவற்றை செய்து பார்த்து தீர்வுகளை முடிவுகளை அறிக்கையாக சமர்ப்பிக்கவும்.

குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் உள்ள சமூக அக்கறையை மேலும் செழுமைப்படுத்தவும், அறிவியல் வழிமுறைப்படி சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வை சிந்திக்கும் விதத்தில் ஏதேனும் ஒரு நாள் அறிவியல் இயக்க நண்பர்கள் பயிற்சி அளிக்கும் விதத்தில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து தரும்படி அன்புடன் வேண்டுகிறோம்

முனைவர். திருநாவுக்கரசு
9751456001
மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர்,
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

NCSC 2018- 2019 -Tamil

Activity_guide_book English

NCSC ஆய்வு சிறப்பாக அமைய சில குறிப்புகள்..

NCSC ஆய்வறிக்கையின் வடிவமைப்பு…

Leave a Reply

Top