You are here
Home > இயக்கச் செய்திகள் > அவிநாசியில் குழந்தைகள் அறிவியல் திருவிழா

அவிநாசியில் குழந்தைகள் அறிவியல் திருவிழா

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநில மாநாட்டை முன்னிட்டு இன்று (07.07.2019) அவிநாசி கிளை ஒருங்கிணைத்த குழந்தைகள் அறிவியல் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அவிநாசி பகுதியில் இருந்து 30 மாணவர்கள், திருப்பூர் பகுதியில் இருந்து 30 மாணவர்கள் என மொத்தம் 60 மாணவர்கள் இந்நிகழ்வில் பங்குபெற்றனர். கதை உருவாக்கம், நாடகம், குழந்தைகள் செய்தி இதழ் தயாரித்தல், போன்ற திறன் பயிற்சி அளிக்கபட்டது. மாணவர்கள் ஆர்வமுடன் தங்கள் படைபாற்றல் திறனை வெளிப்படுத்தினர். நிறைவாக மாணவர்களின் படைப்பில் இன்று புதிதாக திருப்பூர் குட்டீஸ் குறும்பு என்ற இதழ் வெளியிடப்பட்டது. மேலும் மாநில கருத்தாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் கிளை செயல்பாட்டாளர்கள் என அனைவரும் கலந்துகொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர்

Leave a Reply

Top