You are here
Home > இயக்கச் செய்திகள் > உலக புத்தக தினம் கொண்டாட்டம்

உலக புத்தக தினம் கொண்டாட்டம்

ஆண்டுதோறும் ஏப்ரல் 23 ஆம் தேதி உலக புத்தக தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்ஒருபகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்களன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் துரைரவிச்சந்திரன் மற்றும் அறிவியல் இயக்க தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.இதேபோல், கோவை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு விஜயா பதிப்பக உரிமையாளர் மு.வேலாயுதம் தலைமை வகித்தார். மாவட்ட மைய நூலகர் பே.இராஜேந்திரன் வரவேற்று பேசினார். கோவை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் எஸ்.எம்.சையது உசேன் சிறப்புரையாற்றினார். மாவட்ட நூலக ஆய்வாளர் மு.சக்திவேல், வ.கற்பகவிநாயகம், வாசகர் வட்ட தலைவர் டி.எஸ்.சிவா, நூலகர் க.இரவிசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, புத்தக தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

 

சேலம்: 
சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரியில் உலக புத்தக தினம் திங்களன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற கண்காட்சியை கல்லூரியின் துணை தலைவர் தியாகு வள்ளியப்பா துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் செந்தில்குமார், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புத்தக கண்காட்சி நடைபெற்றது. இப்புத்தக கண்காட்சியை முதன்மை மாவட்ட நீதிபதி பி.மோகன் ராஜ் துவக்கி வைத்து பேசினார். இதேபோல் சேலம் புதிய பேருந்து நிலையம், தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் புத்தக கண்காட்சி நடைபெற்றது. இதில் அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் லால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தாராபுரம்:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் தாராபுரத்தில் உலக புத்தகநாள் விழா இரண்டு அமர்வுகளாக கொண்டாடப்பட்டது. தாராபுரம் நகராட்சி பூங்காவில் காலை நடைபெற்ற முதல்அமர்வில் குழந்தைகளோடு கதை சொல்லுதல் என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை நகராட்சி ஆணையாளர் லட்சுமணன் துவங்கி வைத்தார். கோவை மு.சதாசிவம் குழந்தைகளிடம் கதை சொல்லுதல் என்ற தலைப்பில் பேசினார். இதில் குழந்தைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இரண்டாம் அமர்வு தாராபுரம் பூங்கா சாலையில் உள்ள தமிழ்கலைமன்றத்தில் மாலை கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமுகஎகச கிளை தலைவர் இரா.நடராஜன் தலைமை வகித்தார். கிளை செயலாளர் கி.சீரங்கராயன் வரவேற்றார். துணைச் செயலாளர் இரா.குப்புசாமி, செயற்குழு  உறுப்பினர் சி.பாரதி ஆகியோர் கவிதைகள் வாசித்தனர். துணைச்செயலாளர் அரசினியன் கருத்துரை வழங்கினார். எழுத்தாளர் மு.ஆனந்தன் புத்தகநாள் குறித்து சிறப்புரையாற்றினார். நிறைவில் ,பொருளாளர் என்.முத்துசாமி நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நன்றி: தீக்கதிர் நாளிதழ்

Leave a Reply

Top