You are here
Home > இயக்கச் செய்திகள் > நாமக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி

நாமக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி

நாமக்கல்லில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மூட நம்பிக்கைகளும்- அறிவியலும் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் மணிராஜா தலைமை வகித்தார். அதில் சிறப்பு அழைப்பாளாரகாக பங்கேற்ற, முன்னாள் மாநில பொதுச்செயலாளர் ராமலிங்கம் பேசியதாவது: ஜோதிடம் என்ற பெயரில், சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள், நட்சத்திரங்களை வைத்து சமுதாயத்தில் எவ்வாறு மக்களிடையே மூடநம்பிக்கைகள் வளர்ந்து வருகின்றன. தனிமனிதன் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட சமுதாயத்திற்கு, ஊறு ஏற்படுத்தக்கூடிய கலாசார செயல்பாடுகள், கிரகணம் தோஷம், வாஸ்து பரிகாரம் போன்றவைகளுக்கு இரையாகாமல், அறிவியல் பூர்வமாக சிந்தித்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நன்றி: தினமலர் நாளிதழ்

Leave a Reply

Top