You are here
Home > NCSC > மின்னியல் கழிவுகள் முதல்வருக்கு மனு

மின்னியல் கழிவுகள் முதல்வருக்கு மனு

கடலுார்: மின்னியல் கழிவுகளை தனியாக சேகரிக்க வலியுறுத்தி பசுமை நண்பர்கள் துளிர் இல்லத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து பசுமை நண்பர்கள் துளிர் இல்ல குழுவினர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடந்த தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், கடலுார் நகரில் கழிவுகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் மேலாண்மை குறித்த தலைப்பில் ஆய்வறிக்கை சமர்பித்தோம். இதற்காக கள ஆய்வு மேற்கொண்டதில், கடலுார் நகரில் வீதிகளில் வீசப்படும் மின்னியல் கழிவுகள் தனியாக சேகரிக்காமல், பிற கழிவுகளுடன் சேர்த்து குப்பைக் கிடங்கில் சேர்க்கப்படுகிறது.அங்கு குப்பைகள் எரிக்கும் போது மின்னியல் கழிவுகளில் இருக்கும் பாதரசம், காட்மியம், லெட் போன்றவை எரிந்து விஷ வாயு வெளிப்படுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. மேலும், மின்னியல் கழிவுகள் குப்பைகளில் அப்படியே விடப்படும் போது அவை நிலத்தை மாசுபடுத்துவதோடு, நிலத்தடி நீரும் மாசுபட்டு வருகிறது. எனவே கடலுார் நகராட்சி பகுதியில் குப்பைகளை சேகரிக்கும்போது, மின்னியல் கழிவுகளை தனியாக சேகரிக்க துப்புரவு தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர் நாளிதழ்

Leave a Reply

Top