You are here
Home > இயக்கச் செய்திகள் > வரைவு பாடத்திட்டம் குறித்து கலந்துரையாடல்

வரைவு பாடத்திட்டம் குறித்து கலந்துரையாடல்

தேனி:பொம்மிநாயக்கன்பட்டி திண்ணை மனித வள மேம்பாட்டு மையத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை குறித்த கலந்துரையாடல் நடந்தது. திண்ணை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், அறிவியல் இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தெய்வேந்திரன், செயலாளர் ஜெகனாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில், பள்ளிக் கல்வித்துறையின் மூலம் வெளியிடப்பட்ட தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட அனைத்து வரைவு பாடத்திட்டங்கள் குறித்த சாதக பாதகங்கள் விவாதிக்கப்பட்டன. நிகழ்வில் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

நன்றி:தினமலர் நாளிதழ்

Leave a Reply

Top