You are here
Home > அறிவியல் பிரச்சாரம் > அறிவியல் இயக்கத்தின் வழிகாட்டி பயிற்சி முகாம்

அறிவியல் இயக்கத்தின் வழிகாட்டி பயிற்சி முகாம்

ராமநாதபுரம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு குறித்து, வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. வாணியில் உள்ள வேலுமாணிக்கம் மெட்ரிக் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத்தலைவர் இ.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். என்.சி.எஸ்.சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.சொக்கநாதன் வரவேற்றார். பள்ளி முதல்வர் பரிமளா டி ஆண்டனி துவக்கி வைத்தார். பல்வேறு தலைப்புகளில் அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் எம்.பாலமுருகன், மாவட்ட துணைத்தலைவர் நவநீதகிருஷ்ணன், இணைச்செயலாளர் எஸ்.கணேசன், உட்பட பலர் பேசினர். பள்ளி தாளாளர் மனோகரன், சுற்றுச்சூழல் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமார், பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மலைமேல் கண்ணன் வாழ்த்தி பேசினர். ஆசிரியர் எம்.பாலகிருஷ்ணன், வன்னிவயல் பள்ளி ஆசிரியர் சுந்தரேஸ்வரி ஆகியோர் ஆய்வு கட்டுரை போட்டியில் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் நன்றி கூறினார். இதில் 220 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் நாளிதழ்

Leave a Reply

Top