You are here
Home > அறிவியல் கல்வி > அறிவியல் இயக்க வினாடி வினா:

அறிவியல் இயக்க வினாடி வினா:

கூடலுார் : அறிவியல் இயக்கப் போட்டியில் கூடலுார், பந்தலுார் பள்ளிகள் மாவட்ட போட்டிக்கு முன்னேறின.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், மாநில அளவில் நடக்கவுள்ள ஜந்தர் மந்தர் அறிவியல் வினாடி வினா போட்டிகளை முன்னிட்டு, கூடலுார் வட்ட அளவிலான போட்டிகள், கூடலுாரில் நடத்தப்பட்டன.கூடலுார் ஐடியல் மெட்ரிக்., பள்ளி, ஜிடிஎம்ஓ., பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி, புனித தாமஸ், புனித செபாஸ்டியன், புனித அந்தோணியார் பள்ளிகள், அத்திப்பள்ளி, வண்டிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், முதலிரு இடங்களை பிடித்து, மாவட்ட அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கு பெறும் தகுதியை பெற்றன.முன்னதாக, அறிவியல் இயக்க கூடலுார் வட்ட செயலர் சுலைமான் வரவேற்றார். தலைவர் ஜெய்வாப்தீன், நீலகிரி மாவட்ட செயலர் ராஜூ ஆகியோர் பேசினர்.* பந்தலுாரில் நடைபெற்ற போட்டியை, பந்தலுார் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பூபதி துவக்கி வைத்தார்.தேவாலா ேஹாலிகிராஸ் பள்ளி, எருமாடு நீலகிரி மெட்ரிக்., பள்ளி, அய்யன்கொல்லி புனித தாமஸ் மெட்ரிக்., கையுண்ணி சேகரட்ஹாட் மெட்ரிக்., பள்ளி, பந்தலுார் டியூஸ் பள்ளி ஆகியவை வெற்றி பெற்று, மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றன.வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன

Dinamalar.Com

Leave a Reply

Top