You are here
Home > இயக்கச் செய்திகள் > அறிவியல் இயக்கம் சார்பில் உலக புத்தக தினவிழா

அறிவியல் இயக்கம் சார்பில் உலக புத்தக தினவிழா

தாரமங்கலம்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு, தாரமங்கலத்தில், புத்தகம் வாசிப்பு சிறப்பு முகாம் நேற்று நடந்தது. உலக புத்தக தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாரமங்கலம் கிளை சார்பில், புத்தகம் வாசிப்பு சிறப்பு முகாம் சீனிவாசன் தலைமையில், தாரமங்கலம், நைஸ் கிட்ஸ் பள்ளியில் நேற்று நடந்தது. இதில், புத்தகம் வாசிப்பின் அவசியம் குறித்து செங்கோட்டுவேல் பேசினார். ஆசிரியர் செந்தில்குமார் ஆயிஷா புத்தகத்தையும், ஆசிரியர் வள்ளிமுத்து, வகுப்பறையின் கடைசி நாற்காலி புத்தகம், மாணவி திவ்யா, முதல் ஆசிரியர் புத்தகம், ஆசிரியர் ராஜராஜசோழன், ஆளுக்கொரு கிணறு புத்தகத்தையும் அறிமுகம் செய்து உரையாற்றினர். அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஜெயமுருகன் உள்பட, பலர் கலந்து கொண்டனர்.

நன்றி: தினமலர் நாளிதழ்

Leave a Reply

Top