You are here
Home > இயக்கச் செய்திகள் > அறிவியல் இயக்க மாநாடு

அறிவியல் இயக்க மாநாடு

உடுமலை : தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் உடுமலை கிளை மாநாடு, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. அறிவியல் இயக்கத் தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் முத்துக்குமார் மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி ‘அறிவியல் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் பேசினார்.நடப்பாண்டு இறுதிக்குள், 500 உறுப்பினர்களை சேர்ப்பது, அறிவியல் கருத்தரங்கங்கள் நடத்தி, பள்ளி மாணவர்கள் மற்றும் இளம்தலைமுறைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நடப்பாண்டு முதல், 2019ம் ஆண்டு வரை, அறிவியல் இயக்க செயல்பாடுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஆசிரியர் ேஹனாெஷர்லி புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நன்றி: தினமலர் நாளிதழ்

Leave a Reply

Top