You are here
Home > அறிவியல் கல்வி > அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் இல்லம் துவக்க விழா

அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் இல்லம் துவக்க விழா

கரூர்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், சி.எஸ்.ஐ., பள்ளியில் துளிர் இல்லம் துவக்க விழா நடந்தது. விழாவில், துளிர் திறன் அறிதல் போட்டிகளுக்கு மாணவ, மாணவியரை தயார்படுத்துவது, கதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்துவது, மத்திய, மாநில அரசு அலுவலகங்களின் செயல்பாட்டை அறிந்து கொள்ள மாணவர்களை அழைத்து செல்வது குறித்து, மாநில அறிவியல் இயக்க செயலாளர் பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஜான்பாஷா, துணைத்தலைவர் முருகேசன், டாக்டர் செந்தில் வேலவன், தீபம் சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

நன்றி: தினமலர் நாளிதழ்

Leave a Reply

Top