You are here
Home > இயக்கச் செய்திகள் > பயிற்சி நிறைவுவிழா

பயிற்சி நிறைவுவிழா

விருதுநகர்: நபார்டு வங்கி உதவியுடன் நடத்தப்படும் துளிகள் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கான சுடிதார், பிளவுஸ், நைட்டி தயாரிக்கும் 15 நாள் பயிற்சி முகாம் விருதுநகரில் நடந்தது. நேற்று நடந்த நிறைவுவிழாவிற்கு துளிகள் அமைப்பின் மாவட்ட செயலாளர் பழனியம்மாள் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஆதிலட்சுமி வரவேற்றார். வங்கி உதவிபொதுமேலாளர் சுப்பிரமணியன், பாண்டியன் கிராம வங்கி மேலாளர் தங்கம் குணசீலி, நிதிசார் கல்வி மைய ஆலோசகர் வெங்கட்ராமன் பேசினர்.

பயிற்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் குழந்தைவேல் பாண்டியன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் பரமசிவம், துளிகள் மாவட்ட பொருளாளர் தாஜ்நிஜாபேகம் பேசினர். துளிகள் மாவட்ட கணக்காளர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

நன்றி: தினமலர் நாளிதழ்

Leave a Reply

Top