You are here
Home > இயக்கச் செய்திகள் > நெய்வேலி கிளையின் சார்பில் அறிவியல் தின கண்காட்சி

நெய்வேலி கிளையின் சார்பில் அறிவியல் தின கண்காட்சி

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நெய்வேலி கிளை சார்பில் வட்டம் 19 ல் அமைந்துள்ள ஸ்ரீ அரவிந்தோ வித்யாலயா பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தையொட்டிய அறிவியல் கண்காட்சி நெய்வேலி கிளையின் புரவலரும் NLC இந்தியா நிறுவனத்தின் நிதித்துறை பொது மேலாளருமான திருM.மதிவாணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில்  துணைத்தலைவர் M. ராணி வரவேற்று பேசினார். இயக்கத்தின் தலைவர் திரு.பாலகுருநாதன் அறிவியல் இயக்க வரலாறு குறித்து பேசினார். இந்நிகழ்ச்சிக்கு NLC இந்தியா நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு துறையின்  போது மேலாளர் திரு.பீட்டர் ஜேம்ஸ் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தி துவக்கி வைத்தார்.மாவட்ட தலைவர் திரு. தாமோதரன் மாணவ   மாணவியரை வாழ்த்தினார். இயக்கத்தின் செயலாளர் திரு.ஆனந்த்பிரசாத் நிகழ்ச்சியை ஒருங்கினைத்தார்.

சிறப்பு விருந்தினர் பேசுகையில் அறிவியல் ஆராய்ச்சியாளர்களின்  தியாகமும், கண்டுபிடிப்புகளும் தான் நாம் வாழும் நவீன வாழ்க்கை முறைக்கு மிகப்பெரும் காரணமாக உள்ளது. நம் சமூகத்தில் டாக்டர்கள், பொறியாளர்கள் போல விஞ்ஞானிகளும் அதிக அளவில் உருவாக வேண்டும், நெய்வேலியை சுற்றியுள்ள மாணவ மாணவியரின் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு NLC இந்தியா நிறுவனம் உறுதுணையாக இருக்கும் என கூறினார். நெய்வேலி நகரத்திலுள்ள 16 பள்ளிகளிலிருந்து 75 அறிவியல் மாதிரிகள் இடம்பெற்றிருந்தன. 3௦௦ க்கு மேற்பட்ட மாணவ மாணவிகளும் போது மக்களும் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர்.

சூரிய சக்தி பயன்படுத்தும் உபகரணங்கள், மின்னாற்றலை சேமிக்கும் வழிமுறை, மாற்று தொழில்நுட்ப முயற்சிகள், நவீன மாசற்ற போக்குவரத்து சாதனங்கள் ,புவி வெப்பமாதலை தடுக்கும் வழி முறைகள் குறித்த மாதிரிகள் கண்காட்சியில் இடம்பெற்றன.

துணை செயலாளர்கள் சிவக்குமார், அன்பழகன், வெங்கடேசன், துணை தலைவர் பிரசன்னா, ஜானகி,மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செல்வின்ராஜ்,கஜேந்திரன்,கண்ணன், ஸ்ரீராம் அர்விந், கார்த்திகேயன்,பாபு, சரண், மற்றும் ஆசிரியர்கள் தாமரை செல்வி, ஸ்ரீ ரஞ்சனி உள்ளிட்டோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் பொருளாளர் திரு.மோகன் நன்றி கூறினார்.

Leave a Reply

Top