You are here
Home > இயக்கச் செய்திகள் > தேசிய அறிவியல் கண்காட்சி

தேசிய அறிவியல் கண்காட்சி

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நெய்வேலி கிளை சார்பில், வட்டம் 19-இல் உள்ள ஸ்ரீஅரவிந்தோ வித்யாலயா பள்ளியில் தேசிய அறிவியல் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்தக் கண்காட்சிக்கு, என்எல்சி இந்தியா நிறுவன நிதித் துறை பொது மேலாளர் எம்.மதிவாணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம்.ராணி வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர் பாலகுருநாதன், தங்களது இயக்கம் குறித்துப் பேசினார். மாவட்டத் தலைவர் தாமோதரன் மாணவ-மாணவிகளை வாழ்த்திப் பேசினார். இயக்கச் செயலர் ஆனந்த் பிரசாத் ஒருங்கிணைத்தார்.

என்எல்சி இந்தியா நிறுவன சமூகப் பொறுப்புணர்வுத் துறை பொது மேலாளர் பீட்டர் ஜேம்ஸ் கண்காட்சியை தொடக்கி வைத்தார்.  அவர் பேசுகையில், அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் தியாகமும், கண்டுபிடிப்புகளும், நாம் வாழும் நவீன வாழ்வின் மிகப்பெரும் காரணிகளாக உள்ளன. நமது சமூகத்தில் விஞ்ஞானிகள் அதிகளவில் உருவாக வேண்டும். நெய்வேலியைச் சுற்றியுள்ள மாணவ-மாணவிகளின் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு என்எல்சி இந்தியா நிறுவனம் உறுதுணையாக இருக்கும் என்றார்.  கண்காட்சியில், நெய்வேலி நகரின் 16 பள்ளிகளிலிருந்து 75 அறிவியல் மாதிரிகள் இடம் பெற்றன. இதில் சூரிய சக்தியால் இயங்கும் இயந்திரங்கள், மின்னாற்றலை சேமிக்கும் வழிமுறை, மாற்று தொழில்நுட்பம் உள்ளிட்ட மாதிரிகள் இடம்பெற்றன. கண்காட்சியை திரளான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பார்வையிட்டனர்.

துணைச் செயலர்கள் சிவக்குமார், அன்பழகன், வெங்கடேசன், துணைத் தலைவர் பிரசன்னா, ஜானகி, செயற்குழு உறுப்பினர்கள் செல்வின்ராஜ், கஜேந்திரன், கண்ணன், ஸ்ரீராம் அர்விந்த், கார்த்திகேயன், பாபு, சரண், ஆசிரியர்கள் தாமரைச்செல்வி, ஸ்ரீ ரஞ்சனி உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்தனர். பொருளர் மோகன் நன்றி கூறினார்.

நன்றி: தினமணி நாளிதழ்

Leave a Reply

Top