You are here
Home > இயக்கச் செய்திகள் > எங்கள் தேசம் எல்லோருக்குமான தேசம்: ஆயிரம் இடங்களில் அறிவியல் திருவிழா

எங்கள் தேசம் எல்லோருக்குமான தேசம்: ஆயிரம் இடங்களில் அறிவியல் திருவிழா

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழகத்தில் 2016 நவம்பரில் எங்கள்தேசம் என்ற நிகழ்வைத் துவக்கியது. இந்நிகழ்வு அகில இந்திய அளவிலான இயக்கமாகும். பன்முகத்தன்மை, வளர்ச்சி, சுற்றுச்சூழல், ஜனநாயகம் ஆகிய கருத்துக்களை மையப்படுத்தி இப்பிரச்சாரம் நடைபெறுகிறது. அறிவியல் வழியில் இந்தியாவை அறிவதே மிக முக்கிய குறிக்கோளாகும். இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்வதன் ஒருபகுதியாக அறிவியல் திருவிழாவிற்கான மாநிலப்பயிற்சி முகாம் புதுக்கோட்டை அறிவியல் இயக்க அலுவலகத்தில் 4, 5, தேதிகளில் நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமின் துவக்கவிழாவிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச்செயலாளர் எம்.கவனகன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் அ.மணவாளன் வரவேற்புரையாற்றினார். எங்கள் தேசம் நிகழ்வு குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.முஹமது பாதுஷா விளக்கிப் பேசினார். மாநிலப்பொதுச்செயலாளர் அ.அமலராஜன் பயிற்சி முகாமை துவக்கி வைத்துப் பேசினார்.அறிவியல் மனப்பான்மை என்ற தலைப்பில் அகில இந்திய அறிவியல் இயக்கத்தின் செயலாளர் பேரா பொ.ராஜமாணிக்கம் உரையாற்றினார்.
பயிற்சி முகாமில் வானியல் கருத்தாளர்களாக உமாசங்கர், மாநிலச்செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், மந்திரமா தந்திரமா என்றதலைப்பில் மாநிலச்செயலாளர் முனைவர் சேதுராமன், உரையாடல்கள், பாடல்கள் மற்றும் அறிவியல் விளையாட்டுக்கள் குறித்து கல்வியாளர் எஸ்.சுப்பிரமணி, மாநிலச்செயலாளர் சசிக்குமார் ஆகியோர் பயிற்சி வழங்கினர். மாநிலச் செயலாளர் வெண்ணிலா, செயற்குழு உறுப்பினர் எல்.பிரபாகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பயிற்சியில் 20 மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பயிற்சி     முகாமில் தமிழகமெங்கும் ஆயிரம் இடங்களில் அறிவியல் திருவிழாக்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இறுதியாக மாவட்டச்செயலாளர் எம்.வீரமுத்து நன்றி கூறினார்.
நன்றி: நக்கீரன்

Leave a Reply

Top