You are here
Home > இயக்கச் செய்திகள் > தேசிய அறிவியல் மாநாடு: மாணவர்களுக்கு பாராட்டு

தேசிய அறிவியல் மாநாடு: மாணவர்களுக்கு பாராட்டு

நாமக்கல்: மகாராஸ்டிரா மாநிலம், புனே பாராமதியில், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை சார்பில், தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. அதில் பங்கேற்க, நாமக்கல் மாவட்ட அறிவியல் இயக்கத்தின் அங்கமான, குருசாமிபளையம் கல்பனா சாவ்லா துளிர் இல்ல குழந்தைகள் குணவதி குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்ட குழந்தைகள், தங்களது ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தனர். அதில், இளம்விஞ்ஞானிகள் சான்றிதழும், பரிசும் வழங்கப்பட்டது. இவர்களை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் பாராட்டினார். அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுரேந்தர், பொருளாளர் ரகோத்தமன், இணைச் செயலாளர் சரஸ்வதி ஆகியோர் உடனிருந்தனர்.

நன்றி: தினமலர் நாளிதழ்

Leave a Reply

Top