You are here
Home > இயக்கச் செய்திகள் > சமத்துவப் பொங்கல் திருவிழா மற்றும் விளையாட்டுப்போட்டிகள்

சமத்துவப் பொங்கல் திருவிழா மற்றும் விளையாட்டுப்போட்டிகள்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை கலீப் நகரில் உள்ள டி.வி.அபார்ட்மெண்ட் குடியிருப்பில் சமத்துவப் பொங்கல் திருவிழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு விழா துவங்கியது. அப்பார்ட்மெண்டில் உள்ள மைதானத்தில் சமத்துவப்பொங்கல் வைக்கப்பட்டது. அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டனர். பின்பு துளிர் இல்ல மாணவர்களுக்கும், அப்பார்ட்மெண்டில் குடியிருக்கும் பெண்களுக்கும் பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், ஊசி நூல் கோர்த்தல், லெமன் ஸ்பூன், பலூன் உடைத்தல் (ஆண்கள்) , பலூன் உடைத்தல் ( பெண்கள் ), பந்து கடத்துதல் ( ஆண்கள் ), பந்து கடத்துதல் ( ஆண்கள் ), கயிறு இழுத்தல் ( ஆண்கள் ), ஜோடி சேர்தல் என பலவிதமான போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்விற்கு கிளைத்தலைவர் க.உஷாநந்தினி தலைமை தாங்கினார். கிளைச்செயலாளர் ஷெரின் வரவேற்புரையாற்றினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் சலோமி, வழக்கறிஞர் தங்கப்பா, சமூக ஆர்வலர் முரளிதரன் ஆகியோர் பரிசு வழங்கினர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச்செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் அ.மணவாளன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சமத்துவப் பொங்கல் மற்றும் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கிளைப்பொறுப்பாளர்கள் புவனேஸ்வரி, வித்யா மற்றும் துளிர் இல்லக் குழந்தைகள் செய்தனர். சண்முகராஜ், விஸ்வநாத் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

நன்றி: நக்கீரன்

Leave a Reply

Top