You are here
Home > அறிவியல் வெளியீடுகள் > செங்கல்பட்டில் துவங்கியது புத்தக திருவிழா

செங்கல்பட்டில் துவங்கியது புத்தக திருவிழா

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், புத்தக திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது.தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் செங்கை பாரதியார் மன்றம் சார்பில், செங்கைப் புத்தகத் திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் ஆரம்பித்த புத்தக விழாவை, செங்கல்பட்டு சார் ஆட்சியர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். தென்னிந்திய நடிகர்கள் சங்க தலைவர் நாசர், ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, நடிகர்தலைவாசல் விஜய் ஆகியோர் பங்கேற்று பேசினர்.தலைவர் ஜோஸ்வா சாம்டானி வரவேற்றார்.ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் நன்றி கூறினார்.இந்த புத்தக கண்காட்சியில், 35 பதிப்பகங்களும், ஆயிரக்கணக்கான புத்தகங்களும் பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியை காண வந்த பொதுமக்கள், புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். நேற்று முன்தினம் துவங்கிய கண்காட்சி, வரும், 3ம் தேதி வரை நடக்கும்.

நன்றி: தினமலர் நாளிதழ்

Leave a Reply

Top