You are here
Home > இயக்கச் செய்திகள் > துளிர் திறனறி தேர்வு: 1,200 பேர் பங்கேற்பு

துளிர் திறனறி தேர்வு: 1,200 பேர் பங்கேற்பு

கடலுார்: மாவட்டத்தில் மூன்று மையங்களில் நடைபெற்ற துளிர் திறனறி தேர்வை 1,200 மாணவ, மாணவிகள் எழுதினர்.தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் இத்தேர்வு இந்தாண்டு மாவட்டத்தில் கடலுார், நெய்வேலி மற்றும் பண்ருட்டி ஆகிய ஊர்களில் நடந்தது. பொது அறிவியல், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வெளியிடப்படும் துளிர் புத்தகத்தில் வெளிவரும் செய்திகளைக் கொண்டு 100 மதிப்பெண்ணுக்கு இரண்டு மணிநேரம் நடைபெற்ற தேர்வில் 1,200 மாணவ, மாணவிகள் எழுதினர்.தேர்விற்கான ஏற்பாடுகளை மாவட்ட துளிர் ஒருங்கிணைப்பாளர்கள் விஜயகுமார், உதயேந்திரன், நுாநிஷா செய்திருந்தனர். தேர்வு கண்காணிப்பாளர்களாக அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் தாமோதரன், செயலர் விக்டர் ஜெயசீலன், கடலுார் கிளைச் செயலர் பீட்டர் அமல்ராஜ், கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயவீரபாண்டியன், கேத்ரின் தெரசா, தேர்வு எழுதிய அனைவருக்கும் மாநில அளவிலான பாராட்டு சான்றிதழும், துளிர் மற்றும் ஜந்தர் மந்தர் இதழ்கள் ஓராண்டிற்கு வழங்கப்படும். மாநில அளவில் முதல் 10 இடங்களிலும், மாவட்ட அளவில் முதலிடம் பிடிப்பவர்கள் அறிவியல் சுற்றுலா, விஞ்ஞானிகள் சந்திப்பு மற்றும் பாராட்டு கேடயம் வழங்கப்படும்.

நன்றி: தினமலர் நாளிதழ்

Leave a Reply

Top