You are here
Home > NCSC > தமிழ்நாடு அறிவியல் இயக்க ஆசிரியர்களுக்கான பயிற்சி

தமிழ்நாடு அறிவியல் இயக்க ஆசிரியர்களுக்கான பயிற்சி

கரூர்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சி நடந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கரூர் மாவட்டக்குழு சார்பில், 24வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கரூரில் நடைபெற உள்ளது. முன்னதாக, மாநாட்டில் கலந்து கொள்ள, மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. அறிவியல் இயக்கம் மாவட்ட தலைவர் ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் ஜான்பாட்சா வரவேற்றார். மாநில செயலாளர் தியாகராஜன் பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கினார். இதில், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு, சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டனர்.

Leave a Reply

Top