You are here
Home > அறிவியல் பிரச்சாரம் > மாசில்லாத தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு பிரசாரம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முடிவு

மாசில்லாத தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு பிரசாரம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முடிவு

கம்பம் : “மாசில்லாத தீபாவளி கொண்டாட மக்களை வலியுறுத்தி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படும்,” என, அதன் மாநில செயலாளர் தே.சுந்தர் அறிவித்துள்ளார்.

அவர் கூறியவதாவது : சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதை தடுக்க சர்வதேச நாடுகள் போட்டி போட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவும் ஐ.நா.,வின் வேண்டுகோளை ஏற்று பாரீஸ் மாநாட்டு தீர்மானத்தில் சமீபத்தில் கையெழுத்திட்டுள்ளது. கார்பன்டைஆக்சைடு வெளியிடும் அளவை குறிப்பிட்ட சதவீதம் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

தீபாவளி கொண்டாடும் நேரத்தில் நாம் வெடிக்கும் பட்டாசுகளில் இருந்து வெளியாகும் கார்பன்டைஆக்சைடு உள்ளிட்ட சில நச்சுப் பொருள்கள், சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தும். தீபாவளியன்றும் அதற்கு முந்தைய நாளும் பட்டாசுகளில் இருந்து வெளியாகும் மாசு, ஒரு ஆண்டில் நாம் வெளியிடும் மாசுவிற்கு இணையானது என மதிப்பிடப்பட்டுள்ளது.

எனவே பட்டாசு வெடிக்கும் நேரத்தை குறைக்கவும் அல்லது குறிப்பிட்ட நேரத்தில் பட்டாசு வெடிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு வெடிப்பதால் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகளுக்கு கடுமையான சிரமம் ஏற்படுகிறது. மொத்தத்தில் மாசில்லா தீபாவளியை கொண்டாட இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பிரசாரம் ஒன்றை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் துவக்க உள்ளது.

பட்டாசு வெடிக்காத பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கும் திட்டம் ஒன்றையும் அறிவிக்க திட்டமிட்டுள்ளது. மேலும் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுப்புறச்சூழல் மாசு குறித்து பள்ளி மற்றும் கல்லுாரிகளில் கருத்தரங்குகள் நடத்த வேண்டும், என்றார்.

நன்றி:தினமலர் நாளிதழ்

Leave a Reply

Top