You are here
Home > அறிவியல் கல்வி > அறிவியல் திருவிழாவில் பங்கேற்க கேரளா பயணம்

அறிவியல் திருவிழாவில் பங்கேற்க கேரளா பயணம்

திருப்பூர்: இரு மாநில குழந்தைகள் இடையேயான குழந்தைகள் அறிவியல் திருவிழா கேரளாவில் இன்று துவங்குகிறது.கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து தேசிய ஒருமைப்பாடு, கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்டவற்றை பள்ளி குழந்தைகள் தெரிந்து கொள்ள, குழந்தைகள் அறிவியல் திருவிழாவை நடத்துகிறது.இதன்படி, ஒரு மாநிலத்தில் உள்ள குழந்தைகள் அருகிலுள்ள மாநிலத்துக்கு சென்று தங்கி, அங்குள்ள மக்களின் உணவு, கலாச்சாரம் போன்றவற்றை தெரிந்து கொள்வர். அடுத்த சில நாட்களில் அங்குள்ள குழந்தைகள், தமிழகம் வந்து, இங்குள்ள விஷயங்களை தெரிந்து கொள்வர்.திருப்பூரில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த, 87 மாணவர்கள் குழந்தைகள் திருவிழாவில் பங்கேற்க, அறிவியல் இயக்கம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் இருந்து, 15 ஆசிரியர்கள், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு பயிலும், 87 மாணவர்கள், கேரளா மாநிலம் சித்தூருக்கு சென்றனர்.

இன்றும், நாளையும் அங்கு குழந்தைகள் அறிவியல் திருவிழா நடக்கிறது. இதன் கருப்பொருள் தண்ணீர் மற்றும் சுகாதாரம்; பூமியும் தண்ணீரும், மழை நீர் சேகரிப்பு, தண்ணீரினால் பரவும் நோய், சதுப்பு நிலம், தண்ணீரும் தாவரமும் என்ற ஐந்து தலைப்புகளில் நழுவுப்படங்கள், பாடல், நாடகம், நேரிடையாக பார்வையிடுதல் உள்ளிட்டவற்றை மாணவர்கள் தெரிந்து கொள்வர்…

நன்றி:தினமலர் நாளிதழ்

Leave a Reply

Top