You are here
Home > மாவட்ட நிகழ்வுகள் > அறிவியல் கருத்தரங்கு

அறிவியல் கருத்தரங்கு

குன்னுார்: எடப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., நாட்டுநலப்பணி திட்டம் சார்பில், சிறப்பு முகாம், கோடமலை கிராமத்தில் நடந்தது.அதன் ஒரு பகுதியாக, காலநிலை மாற்றம் குறித்த அறிவியல் கருத்தரங்கு நடந்தது. நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ராஜூ, சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பேசுகையில்,“வானிலை என்பது, நாம் அன்றாடம் உணரும் வெப்பம், காற்று, பனி, குளிர் போன்றவற்றை குறிக்கும். 30 ஆண்டு, அதற்கு மேலான காலத்தில் வானிலையில் ஏற்பட்டுள்ள சராசரி மாற்றத்தின் அடிப்படையில் காலநிலை மாற்றம் கணக்கிடப்படுகிறது. நீலகிரியில் காலநிலை மாற்றத்திற்கு, அன்னிய நாட்டு தாவரங்களே காரணம்,” என்றார்.

Leave a Reply

Top