You are here
Home > கல்வி > தூத்துக்குடியில் தேசிய கல்வி கொள்கைக்கு எதிரான கருத்தரங்கம்

தூத்துக்குடியில் தேசிய கல்வி கொள்கைக்கு எதிரான கருத்தரங்கம்

தூத்துக்குடி மாவட்ட கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில், தேசிய கல்வி கொள்கை 2016–க்கு எதிரான கருத்தரங்கம் நடந்தது. தூத்துக்குடி புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தூத்துக்குடி மாவட்ட தலைவர் பவுல் ஆபிரகாம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் ஜெயபால் பி.ராயர் வரவேற்றார். நவநீத கிருஷ்ணன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செல்வராஜ், ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்கம் சாம்பசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் மாநில பொருளாளர் முருகன், மூட்டாவின் துணை தலைவர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கல்வி கொள்கையின் பாதிப்புகள் பற்றி பேசினார்கள். கருத்தரங்கில், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் முத்துசாமி நன்றி கூறினார்.

நன்றி: தினத்தந்தி நாளிதழ்

Leave a Reply

Top