You are here
Home > Thulir Illam > துளிர் இல்லம் தொடக்க விழா

துளிர் இல்லம் தொடக்க விழா

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், நெய்வேலி கிளை சார்பில் துளிர் இல்லம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

வட்டம் 17-ல் உள்ள ஜவகர் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் நூர்நிஷா தலைமை வகித்தார்.

பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் வரவேற்றார். என்.எல்.சி. பள்ளிகளின் செயலர் ஐ.நெடுமாறன் துளிர் இல்லம் மாணவர்களை அறிமுகப்படுத்தி, சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்துப் பேசினார்.

மாநில கருத்தாளர் எஸ்.பாலகுருநாதன் கருத்துரை வழங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஆனந்த் பிரசாந்த் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கான வழிமுறைகளை விளக்கினார்.

நிகழ்ச்சியில் காமராஜர் நினைவுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்டப் பொருளர் எஸ்.விஜயகுமார் ஹிரோஷிமா-நாகசாகி நினைவு தின திரைப்பட நிகழ்ச்சியை காண்பித்தார். இந்நிகழ்ச்சியில் பதிவு செய்யப்பட்ட துளிர் இல்லம் 2016-2017 கல்வியாண்டில் அறிவியல் நிகழ்ச்சியில் பங்கேற்பர் எனத் தெரிவித்தனர்.

நன்றி: தினமணி நாளிதழ்

Leave a Reply

Top