You are here
Home > இயக்கச் செய்திகள் > எளிய அறிவியல் பரிசோதனை: பள்ளி மாணவர்கள் உற்சாகம்

எளிய அறிவியல் பரிசோதனை: பள்ளி மாணவர்கள் உற்சாகம்

சேலம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், இடைப்பாடி யுனிவர்சல் மெட்ரிக்ப்பள்ளியில் எளிய அறிவியல் பரிசோதனை பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. மதுரை அழகர்சாமி, பல்வேறு எளிய கருவிகளை கொண்டு 101 அறிவியல் பரிசோதனை பயிற்சிகளை செய்து காண்பித்தார். அது தொடர்பான அறிவியல் விளக்கம் அளித்து, மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஜெயமுருகன் அறிவியல் நிகழ்ச்சிகளை சுவைப்பட கூறினார். ஏராளமான மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, கொங்கணாபுரம் அடுத்த அரிசிப்பாளையம், பள்ளிப்பட்டி பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில், இன்று, அறிவியல் பரிசோதனை பயிற்சி வகுப்பு நடக்கிறது.

நன்றி: தினமலர் நாளிதழ்

Leave a Reply

Top