You are here
Home > இயக்கச் செய்திகள் > ஆசிரியர் தினப் போட்டிகள் 2016: அறிவியல் இயக்கம் அறிவிப்பு

ஆசிரியர் தினப் போட்டிகள் 2016: அறிவியல் இயக்கம் அறிவிப்பு

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாநில அளவில் ஆசிரியர், மாணவர் மற்றும் பொதுமக்களுக்கான கட்டுரை, கவிதை போட்டிகள் நடைபெற்று வருகின்றன.. இந்த ஆண்டிற்கான போட்டி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன..

ஒருவர் ஒரு படைப்பினை மட்டுமே அனுப்ப வேண்டும்.. படைப்புகள் புதியதாகவும் பங்கேற்பாளரின் சொந்த படைப்பாகவும் இருப்பது அவசியம்.. போட்டிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.. சிறந்த படைப்புகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் விஞ்ஞானச் சிறகு, துளிர், விழுது போன்ற இதழ்களில் பிரசுரிக்கப்படும்..

இப்போட்டிகளைச் சிறப்பாக நடத்திடும் வகையில் மாவட்ட கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர்களை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக  நியமித்திடலாம்… பத்திரிகைச் செய்திகள் அளித்து அதிகமான நண்பர்கள் பங்கேற்றிட உரிய ஏற்பாடுகளைச் செய்திட வேண்டுமெனவும் மாவட்டக் குழுவைக் கேட்டுக் கொள்கிறோம்..

ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பங்கேற்பாளர்கள் பட்டியலையும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற படைப்புகளையும் ஆசிரியர் தின போட்டிகளுக்கான மாநில ஒருங்கிணைப்பாளரின் முகவரிக்கு ஆக.31க்கு முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும்..

மாநில அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் விபரம் செப்.10,11 தேதிகளில் நடைபெறும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலப் பொதுக்குழுவில் அறிவிக்கப்படும்.. www.tnsf.co.in என்ற இணைய தளத்திலும் வெளியிடப்படும்.. கல்வியாளர்களும் விஞ்ஞானிகளும் பங்கேற்றுச் சிறப்பிக்கும் வகையில் இவர்களுக்கான பாராட்டு விழா செப். இறுதியில் விழுப்புரத்தில் நடைபெறும்.. பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்..

ஆசிரியர் தின போட்டிகள் விபரம் 2016

பிரிவு

போட்டி

தலைப்பு

பள்ளி மாணவர்கள் கட்டுரை அன்புள்ள ஆசிரியருக்கு…

(4 பக்கங்களுக்கு மிகாமல்)

கல்லூரி மாணவர்கள் கவிதை நான் விரும்பும் வகுப்பறை

(20 வரிகளுக்குள்)

பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் கட்டுரை என்னைச் செதுக்கிய மாணவர்கள்..

(6 பக்கங்களுக்கு மிகாமல்)

பொதுமக்கள் கட்டுரை அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்பதில்

மக்களின் பங்கு

 மேலும் விபரங்களுக்கு…

வே.பாலமுருகன்

மாநில ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் தின போட்டிகள் 2016

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

எண்.43, மாரியம்மன் கோயில் தெரு, நன்னாடு அஞ்சல்

விழுப்புரம் மாவட்டம்- 605301

அலைபேசி: 9488284512

 

Leave a Reply

Top