You are here
Home > அறிவிப்புகள் > தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: பெயர் பதிவுக்கு ஆக. 16 கடைசி

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: பெயர் பதிவுக்கு ஆக. 16 கடைசி

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் குழந்தைகள் இம்மாதம் 16ஆம் தேதிக்குள் பெயர் பதிவு செய்துகொள்ளலாம் என தக்கலையில் நடைபெற்ற வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப குழுமம் உதவியுடன் “நிலைப்புரு வளர்ச்சிக்கு அறிவியல் தொழில்நுட்பம்  மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள்’ என்ற கருப்பொருளில் இம்மாநாடு நடைபெறுகிறது.  இம்மாநாட்டில் பங்கேற்கும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவரும், தேசிய குழந்தைகள் அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான ஜே.ஆர். பத்மதேவன் தலைமை வகித்தார். அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலர் சிவஸ்ரீரமேஷ் ஒருங்கிணைத்தார். பொருளாளர் ஜி.ஜினிதா வரவேற்றார். பயிற்சியின் நோக்கம் குறித்து  மாவட்ட கௌரவத் தலைவர் ஆர்.ஷெலின்மேரி பேசினார். தொடர்ந்து, ஆசிரியர்கள் 7 குழுக்களாகப் பிரிந்து ஏழு உப தலைப்புகளில் விவாதம் செய்து ஆய்வு கட்டுரைக்கான  தலைப்புகளை தேர்வு செய்தனர்.

தொடர்ந்து மார்த்தாண்டம் நேசமணி கிறிஸ்தவ கல்லூரி பேராசிரியர்  ஐசக் சோபனராஜ்,  தொகுப்புரை வழங்கினார். குழந்தைகள் ஆய்வுக்கட்டுரையை எவ்வாறு மேற்கொள்ள வேண்டுமென அறிவியல் இயக்க துணைத் தலைவர் ஜே.எ.டோமினிக்ராஜ், அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜே.ஜெனித் ஆகியோர் பேசினர். பயிற்சி ஏற்பாடுகளை  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  ஜெயகுமார்  தலைமையில் செய்திருந்தினர்.

ஆக. 16ஆம் தேதிக்குள் ஆய்வு மேற்கொள்ளும் பள்ளிகள், குழந்தைகளின் பெயர்களை பதிவு செய்யவேண்டுமென  பயிற்சிமுகாமில் தீர்மானிக்கப்பட்டது.

நன்றி:தினமணி நாளிதழ்

Leave a Reply

Top