You are here
Home > அறிவியல் வெளியீடுகள் > மேட்டுப்பாளையத்தில் புத்தகத் திருவிழா துவக்கம்

மேட்டுப்பாளையத்தில் புத்தகத் திருவிழா துவக்கம்

மேட்டுப்பாளையத்தில் புத்தகத் திருவிழாவின் துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் 2-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 5 முதல் 15 வரை நடைபெற உள்ளது. மேட்டுப்பாளையம் கோ-ஆபரேடிவ் காலனி, ஈஎம்எஸ் திருமண அரங்கில் நடைபெற்ற துவக்க விழாவுக்கு புத்தகத் திருவிழா வரவேற்புக்  குழுத் தலைவர் என்.கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் நவரத்தன்மல், நகர்மன்ற துணைத் தலைவர் ரமாசெல்வி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர் ராஜாமணி முன்னிலை வகிக்க, அறிவியல் இயக்க மாநிலச் செயலர் பாதுஷா வரவேற்றார்.

புத்தகக் கண்காட்சியைத் தொடக்கிவைத்து நீதிபதி சந்துரு பேசியதாவது: இன்று மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர்களிடையே வாசிப்புத் திறன் குறைந்து வருகிறது. இதனால், ஆரம்ப வகுப்பு முதல் இறுதி வகுப்பு வரை அரசு இலவசக் கல்வி வழங்கினாலும், ஆண்டுக்கு ஆண்டு மாணவர் சேர்க்கை குறைந்துவருகிறது. மேலும் கணினி, செல்லிடப்பேசி, தொலைக்காட்சி ஆகியவற்றில் இளைஞர்கள் முடங்கிப் போவதால், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியே பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

இதைத் தடுக்க மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிப்பது அவசியம். அதற்கு பெற்றோர்கள் இதுபோன்ற புத்தகக் கண்காட்சிகளில் குழந்தைகளைப் பங்கேற்க செய்து அவர்களிடையே புத்தக வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்த முயல வேண்டும் என்றார். தொடர்ந்து தமிழால் வாழ்வோம் என்ற தலைப்பில் நெல்லைக் கண்ணன் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் நகர்மன்றத் தலைவர் சதீஷ்குமார், அரிமா சங்க மாவட்ட முன்னாள் ஆளுநர் நவரத்தன்மல், நீதித் துறை நடுவர் சுரேஷ்குமார், ஐக்கிய ஜமாத் நிர்வாகி அக்பர் அலி, அரிமா சங்கத் தலைவர் ராஜரத்தினம் வாழ்த்திப் பேசினர்.

இதில், கோவை தினமணி நாளிதழ் அரங்கு உள்பட சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்பட பல்வேறு பகுதி புத்தகப் பதிப்பாளர்கள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த 52 அரங்குகளில், பல்வேறு தலைப்புகளில் 10 லட்சம் நூல்கள் விற்ப

Leave a Reply

Top