You are here
Home > அறிவியல் வெளியீடுகள் > மேட்டுப்பாளையத்தில் மாரத்தான் போட்டி

மேட்டுப்பாளையத்தில் மாரத்தான் போட்டி

மேட்டுப்பாளையத்தில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மேட்டுப்பாளையத்தில் ஆகஸ்ட் 5 முதல் 15-ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ,மாணவிகள் பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி மேட்டுப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நகர மகாஜன மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் ராஜாமணி தலைமை வகித்தார். அறிவியல் இயக்க மாநிலச் செயலர் பாதுஷா, புத்தகத் திருவிழா நிர்வாகிகள் அம்சா, சத்குரு சாய் சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் விஜயசங்கர், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிவியல் இயக்க நகரச் செயலர் மணி வரவேற்றார். காவல் ஆய்வாளர் சுகவனம் மாரத்தானை துவக்கி வைத்தார். இதில், கலந்து கொண்ட மாணவர்களுக்கு  பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நன்றி: தினமணி நாளிதழ்

Leave a Reply

Top