You are here
Home > அறிவிப்புகள் > ஆக. 6-ல் ஹிரோஷிமா நாகசாகி நினைவு தின ஓவியப் போட்டிகள்

ஆக. 6-ல் ஹிரோஷிமா நாகசாகி நினைவு தின ஓவியப் போட்டிகள்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆகஸ்ட் 6-ல் ஹிரோஷிமா, நாகசாகி நினைவு தின ஓவியப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

புதுக்கோட்டை கலீப் நகரில் கிளைத் தலைவர் க. உஷாநந்தினி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற அவ்வியக்கக் கிளைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கலீப்நகர் மருப்பிணி சாலையில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அக்குடியிருப்பின் நடுவே உள்ள மைதானத்தில் முளைத்துள்ள முள்புதர்களை அகற்றி குழந்தைகளுக்கான பூங்கா அமைத்துத் தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதிக்கு தற்போது கிடைத்து வரும் சுகாதாரமற்ற அம்மையப்பட்டி தண்ணீரைத் தவிர்த்து காவிரி குடிநீரை விநியோகிக்க வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.டி. பாலகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் அ. மணவாளன் ஆகியோர் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.

நன்றி: தினமணி நாளிதழ்

Leave a Reply

Top