You are here
Home > இயக்கச் செய்திகள் > அரசு பள்ளிகளுக்கு பாராட்டு

அரசு பள்ளிகளுக்கு பாராட்டு

தேனி, : தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கான பாராட்டு விழா தேனிஅல்லிநகரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

விழாவிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் செந்தில்குமரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் அம்மையப்பன், சேசுராஜ், மணிமேகலை முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன் வரவேற்றார். அறிவியல் இயக்க மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர் சுந்தர், தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வாசு ஆகியோர் பேசினர்.

இதில் தேனி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற 65 அரசுப் பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை பாராட்டுச் சான்றிதழ்களையும், நினைவு பரிசுகளையும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் ராகவன், பள்ளித் துணை ஆய்வாளர் வெங்கடேசன் வழங்கி பாராட்டினர்.

இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள் பாண்டி, ஸ்ரீதர், ஜெகநாதன், முருகேசன், ஜெகதீசன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி:

தினகரன் நாளிதழ்

Leave a Reply

Top