You are here
Home > அறிவியல் கல்வி > கல்பனா சாவ்லா பிறந்த நாள் விழா

கல்பனா சாவ்லா பிறந்த நாள் விழா

வெண்ணந்தூர்: குருசாமிபாளையம் துளிர் இல்லத்தில், கல்பனா சாவ்லா பிறந்தாள் விழா கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்டம், குருசாமிபாளையத்தில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், ‘கல்பனா சாவ்லா’ துளிர் இல்லம் கடந்த, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. இதில், நேற்று முன்தினம் மாலை, கல்பனா சாவ்லா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். துளிர் இல்ல மாணவி சவுமியா, ‘அறிவியல் பரப்புவோம்’ என்ற விழிப்புணர்வு பாடலை பாடினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட இணைச்செயலாளர் சரஸ்வதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி: தினமலர் நாளிதழ்

Leave a Reply

Top