You are here
Home > இயக்கச் செய்திகள் > அரசுப் பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும்

அரசுப் பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்  மலர் மகளிர் மேம்பாட்டு இயக்கத்தின்  தக்கலை ஒன்றிய மாநாடு அழகியமண்டபத்தில்  நடைபெற்றது.

மாநாட்டுக்கு பி.மேரிலதா தலைமை வகித்தார்.  மாநாட்டை கௌரவத் தலைவர் ஷெலின்மேரி  தொடங்கிவைத்து பேசினார். சுசிலா வரவேற்றார். மாநாட்டில் கல்வி தீபம் ஏற்றப்பட்டு அரசுப் பள்ளிகளை பாதுகாக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் கவிஞர் ஹைதர்அலி  சிறப்புரையாற்றினார். கிராம ஒருங்கிணைப்பாளர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழ்நாடு அறிவியல்  இயக்க மாவட்டத் தலைவர்கள் சிவஸ்ரீ ரமேஷ், பி.பி.கணேசன், மலர் மாவட்டச் செயலர்  ஜான்சிலிபாய், மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சுஜாஜாஸ்பிலின் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டில், குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கவேண்டும். அரசுப் பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மலர் மாவட்ட துணைத் தலைவர் சுசிலா நன்றி கூறினார்.

நன்றி:தினமணி நாளிதழ்

Leave a Reply

Top