You are here
Home > இயக்கச் செய்திகள் > மருத்துவம், பொறியியல் படிப்பு செலவை அரசு ஏற்க வேண்டும்

மருத்துவம், பொறியியல் படிப்பு செலவை அரசு ஏற்க வேண்டும்

நத்தம், : தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ராம்சன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாநிலத் தலைவர் பேராசிரியர் மோகனா தலைமை தாங்கினார். திண்டுக்கல் மாவட்ட தலைவர் ரவீந்திரன், பொருளாளர் கௌதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இராம்சன்ஸ் பள்ளி தாளாளர் ராமசாமி வரவேற்றார்.

இதில் புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான வரைவினை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும். மத்திய அரசின் வித்யாஞ்சலி யோஜனா திட்டத்தை  உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் படிப்பிற்கான உயர்கல்விச் செலவுகளை மாநில அரசே ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அனைத்து மாவட்டச் செயலாளர்களும், மாநிலச் செயற்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் வீரையா, செயற்குழு உறுப்பினர்கள் மணிகண்டன், தனபால் ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக மதுரைக்கல்லூரி விலங்கியல் துறைத் தலைவர் டாக்டர். தினகரன், மாநிலக் கல்வி கருத்தாளர் சுப்பிரமணியன் ஆகியோர் ராம்சன்ஸ் பள்ளி ஆசிரியர்களுக்கு கற்பித்தல் திறன் மேம்பாடு பற்றி பயிற்சி அளித்தனர்.

நன்றி: தினகரன் நாளிதழ்

Leave a Reply

Top