You are here
Home > அறிவியல் கல்வி > மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் திருவிழா நிறைவு

மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் திருவிழா நிறைவு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. உடுமலையை அடுத்துள்ள பள்ளபாளையம் ஸ்ரீஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் திருவிழா சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.

இதன் நிறைவு நாளில் அனைத்துக் குழந்தைகளும் அமராவதி அணையில் இருந்து முதலைப் பண்ணை வரை இயற்கை அறிவியல் நடைப் பயணம் மேற்கொண்டனர். அப்போது, பல்வேறு வகையான தாவரங்கள், பூச்சி வகைகளின் மாதிரிகளைச் சேகரித்தனர். இதில், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.  மேலும், இந்திய கணிதவியல் ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானியான சென்னையைச் சேர்ந்த டாக்டர் ராமானுஜம் அறிவியல் உண்மைகள் என்ற தலைப்பில் குழந்தைகளுடன் கலந்துரையாடினார். இரவு 10 மணிக்கு தொலைநோக்கி மூலம் சூரியக் குடும்பக் கோள்கள், நட்சத்திரங்களைக் கண்டுகளிக்கும் வகையில் வான்நோக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் முகமது பாதுஷா மாநாட்டில் நிறைவுரையாற்றினார். மாவட்டச் செயாளர் வி.ராமமூர்த்தி, உடுமலை கிளைச் செயலாளர் மு.பாலச்சந்திரமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

நன்றி: தினமணி நாளிதழ்

தொடர்புடைய பதிவுகள்:

கோடை குழந்தைகள் அறிவியல் திருவிழா

குழந்தைகள் அறிவியல் திருவிழா தொடக்கம்

Leave a Reply

Top