You are here
Home > அறிவிப்புகள் > கோடை குழந்தைகள் அறிவியல் திருவிழா

கோடை குழந்தைகள் அறிவியல் திருவிழா

உடுமலை: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், மாநில அளவிலான ‘கோடை குழந்தைகள் அறிவியல் திருவிழா’ 28ம்தேதி உடுமலையில் நடக்கிறது. பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், அறிவியல் திருவிழா நடத்தப்படுகிறது.

நடப்பாண்டில் கோடைக்கால அறிவியல் விழா நடத்த உடுமலையில் ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் படி, மாநில அளவிலான கோடை குழந்தைகள் அறிவியல் திருவிழா, மே 28 மற்றும் 29ம் தேதி இப்பள்ளியில் நடக்கிறது. இவ்விழாவில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து, 6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள், 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.

விழாவிற்கான வரவேற்புக்குழு கூட்டம், அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடந்தது. அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் செல்லத்துரை தலைமை வகித்தார். பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். உடுமலை அறிவியல் இயக்க செயலாளர் பாலசந்திரமூர்த்தி நன்றி கூறினார்.

நன்றி: தினமலர் நாளிதழ்

One thought on “கோடை குழந்தைகள் அறிவியல் திருவிழா

Leave a Reply

Top