You are here
Home > இயக்கச் செய்திகள் > தமிழ்நாடு அறிவியல் இயக்கம் துண்டு பிரசுரம் வினியோகம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் துண்டு பிரசுரம் வினியோகம்

கோத்தகிரி: பணம் வாங்காமல் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், துண்டுப்பிரசுரம் வினியோகித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ராஜூ தலைமையில், நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கினர்.

அதில், ‘கொள்கையில்லாத அரசியல் பாவம்’ என்ற தலைப்பில், ஓட்டுக்கு பணம் வாங்குவது குற்றம்; கொள்ளையர்களும் கொலைக்காரர்களும் நம்மை ஆள்வதை தவிர்க்கவேண்டும்; இலவசமாக எதையும் பெறுவதற்கு நான் பிச்சைக்காரனா’ போன்ற வாசகங்களுடன், ஜனநாயக கடமையை நிலை நிறுத்த, சரியான வேட்பாளரை தேர்ந்தெடுக்க, அனைவரும் கண்டிப்பாக ஓட்டளிக்கவேண்டும்’ கூறப்பட்டிருந்தது.

நன்றி: தினமலர் நாளிதழ்

Leave a Reply

Top