You are here
Home > இயக்கச் செய்திகள் > கம்பத்தில் துண்டு பிரசுரம் வினியோகம்

கம்பத்தில் துண்டு பிரசுரம் வினியோகம்

கம்பம்: சட்டசபை போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களிடமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கல்வித்துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பான கருத்துக்கள் அடங்கிய துண்டுபிரசுரம் வினியோகிக்கப்படுகிறது. இதன் தலைவர் தே.சுந்தர் தலைமையில் ஆசிரியர்கள் குழு இதனை கம்பத்தில் தி.மு.க. வேட்பாளர் ராமகிருஷ்ணன், மற்ற வேட்பாளர்களிடம் வழங்கினர்.

சுந்தர் கூறுகையில், “தேர்தலில் வெற்றிபெறுவோர் இந்த பிரசுரத்தில் உள்ள விஷயங்கள் குறித்து அரசிடம் பேசி கல்வித்துறையை மேம்படுத்த உதவ வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம். அரசு பள்ளி மாணவர்ளுக்கு அரசு பணி மற்றும் உயர் கல்வியில் முன்னுரிமை, மத்திய அரசு தனியார் கூட்டுப்பள்ளிகள் நிறுவுவதை தடுப்பது, ஒரே கல்வி வாரியம் அமைத்து உண்மையான சமச்சீர் கல்வியை அறிமுகம் செய்வது, ஆரம்ப பள்ளிகளில் மழலையர் வகுப்புக்கள் தொடங்குவது, மழலையர் கல்விமுதல் முதுகலை கல்வி வரை அரசின் பொறுப்பிலும் செலவிலும் தரமான சமமான கல்வி உறுதிசெய்யப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் இதில் வலியுறுத்தியுள்ளோம்,” என்றார்.–

நன்றி:தினமலர் நாளிதழ்

Leave a Reply

Top