You are here
Home > இயக்கச் செய்திகள் > அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழுக் கூட்டம்

அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழுக் கூட்டம்

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு கூட்டம் அதன் தலைவர் டி.,நவநீதகிருஷ்ணன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவர்கள் மு.பாலமுருகன், கு,காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணைச் செயலர் மா.ரமேஷ்குமார் வரவேற்றார். மாவட்டச் செயலர் இ.பாலகிருஷ்ணன் பேசுகையில், மே 21-ஆம் தேதி வால்பாறையில் நடைபெற இருக்கும் வாசிப்பு முகாமில் பங்கேற்றல், இயற்கை வள ஆய்வு குறித்து பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் எம்.பாண்டியராஜன் தரமான கல்வி சமமாக அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று பேசினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.கணேசன் நன்றி கூறினார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவோம், தரமான கல்வியை வழங்குவோம் என்று வாக்குறுதி அளிக்க வேண்டும், கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும், ஊழலற்ற உயர்கல்வியை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நன்றி: தினமணி நாளிதழ்

Leave a Reply

Top