You are here
Home > அறிவியல் பிரச்சாரம் > ஈரோடு செங்குந்தர் பள்ளியில் புதன் இடைமறைப்பு நிகழ்வை மகிழ்வுடன் கண்டு களித்தனர்

ஈரோடு செங்குந்தர் பள்ளியில் புதன் இடைமறைப்பு நிகழ்வை மகிழ்வுடன் கண்டு களித்தனர்

அன்பின் நண்பர்களே, இனிய வணக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஈரோடு, நேற்று 09.05.16 மாலை செங்குந்தர் பள்ளியில் புதன் இடைமறைப்பு நிகழ்வை, சூரியனுக்கு குறுக்கே புதன்கடந்து செல்லும் நிகழ்வைக் காண  மக்களை, பத்திரிக்கையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சுமார் 100 பேர் வந்திருந்தனர்.. அனவைரும் புதன் கோள் நகர்வை மாலை 5.00 மணியிலிருந்து 5.40 வரை மகிழ்வுடன் கண்டு களித்தனர்.

பார்வையாளர்களுக்கு புதன் இடை மறைப்பு தொடர்பான கட்டுரையும் பட விளக்கத்துடன் தரப்பட்டது. பேரா.சோ. மோகனா, மாநிலத்தலைவர், தமிழ்நாடுஅறிவியல் இயக்கம் புதன் இடைமறைப்பு தொடர்பாக பத்திரிகை, ஒளி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.. தொடர்ந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடையளித்தார். பின்னர் கூடியிருந்த பொதுமக்கள், மாணவர்களுக்கு புதன் இடை மறைப்பு, சூரியன் குறுக்காக நகர்தல் தொடர்பான விளக்கங்களைத் தந்தார். பிறகு அவர்களின் வினாக்களுக்கும் விளக்கமும் பதிலும் தந்தார். பொதுமக்கள், இந்த புதன்கோள் இப்படி சூரியனின் நகர்வதால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா, நல்லது நடக்குமா என்றெல்லாம்கேட்டனர். ” சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போல, இதுவும் ஓர் இயற்கை நிகழ்வு.. எப்படி சூரியகிரகணத்தின் போது சூரியன், சந்திரன் , பூமி மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருமோ அது போல புதன் இடை மறைப்பில் சூரியன், புதன் கோள், பூமி மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்.. ஆனால் இதில் புதன் கோள் உருவில் சிறியதாக இருப்பதால் சூரியனை மறைக்காமல் குறுக்கே நகர்ந்துசெல்கிறது. இதனால் பூமிக்கோ, மக்களுக்கோ எந்தவித உயிரினத்துக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது.. எந்த கெட்ட நிகழ்வும் நடக்காது. வேறு எதுவும் நிகழாது என்று விளக்கமளிக்கப்பட்டது..

ஈரோடுமாவட்ட துணைத்தலைவர் திருமிகு சங்கர், தொலைநோக்கி மூலம் சூரியனையும், புதன்கோள் நகர்வையும் மக்களுக்கும் மாணவர்களுக்கும் ஊடகத்தினருக்கும் காண்பித்தார். ஈரோடு மாவட்ட அறிவியல் இயக்கத் தலைவர் சக்கரவர்த்தி, பார்வையாளர்களுக்கு அறிவியல் இயக்கம் பற்றி கூறினார். வானியல் ஒருங்கிணைப்பாளர் திருமிகு. நந்தகுமார் வானியல் அற்புத நிகழ்வுகள் தொடர்பாக அறிமுக உரை நிகழ்த்தினார். ஈரோடு மாவட்ட அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள் அனைத்துஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

என்றும் அறிவியல் உணர்வுடன்…
மோகனா

Leave a Reply

Top